| பெங்களூரு : பெங்களூருவில் இருக்கும் அப்பல்லோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் மற்றும் டெக்கான் ஏவியேஷன் இணைந்து ஹெலி - ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஒத்திகை விழா நேற்று பெங்களூருவில் நடந்தது. இவர்கள் மட்டும் சேர்ந்து ஹெலிகாப்டர் சேவை நடத்தினால் நோயாளிகளுக்கு செலவு அதிகமாகும் என்பதால் இவர்களுடன் சேர்ந்து கொள்ள மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளை நாடியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போதெல்லாம் நிறைய அவசர கேஸ்களுக்கு விமான சேவை தேவைப்படுகிறது. அப்போது தான் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் சேவை மிகுந்த செலவை ஏற்படுத்தும். இம்மாதிரியான சமயங்களில் அவர்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் செலவு குறையும் என்று அப்பல்லோ ஹாஸ்பிடல் என்டர் பிரைசஸின் எக்ஸிகூடிவ் டைரக்டர் சங்கீதா ரெட்டி மற்றும் ஏர் டெக்கான் எக்ஸிகூடிவ் சேர்மன் கேப்டன் கோபிநாத் ஆகியோர் தெரிவித்தனர். எனவே நாங்கள் மூன்று நான்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் இது சம்பந்தமாக இன்சூரன்ஸ் சட்டதிட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதெல்லாம் முடிந்தபின் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள் என்றனர். ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளில் அப்பல்லோ ஆஸ்பத்திரி, ஹெலிகாப்டர் மூலமாக அவசர நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்துள்ளது. ஆனால் இதற்காக அந்த நோயாளிகளுக்கு ஒரு தடவைக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை செலவாகி உள்ளது. அல்லது ஒரு மணி நேர ஹெலிகாப்டர் சேவைக்கு ரூ.75 ஆயிரம் செலவாகிறது. முறையாக பாலிசி எடுத்தால் இந்த செலவை குறைக்கலாம். முதலில் மெடி அசிஸ்ட் இந்தியா நிறுவனம், இதற்கான செலவில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. கார்பரேட் அலுவலகங்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க திட்டம் உள்ளது. இப்போது ஹெலிகாப்டர் இறங்க வசதி உள்ள பெங்களூரு, டில்லி, புவனேஷ்வர் மற்றும் கோல்கட்டாவில் இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. ஹெலி - ஆம்புலன்ஸ் வசதி தேவைப்படுபவர்கள் போன் செய்த அரை மணி நேரத்தில் ஹெலிகாப்டர் அங்கு வந்து விடும். ஹெலிகாப்டரிலேயே உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவ குழு இருக்கும். |
No comments:
Post a Comment