| சென்னை : தமிழ்நாடு,கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் பணம் படைத்தவர்கள் இப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஏராளமான நிலங்களை வாங்கி குவிக்க ஆரம்பிக்கின்றனர். காரணம் அந்த பகுதியில் உள்ள பாறைகளில் தங்கம் படிந்திருப்பதாக வந்த தகவலால்தான். தமிழ்நாடு கேரள எல்லையில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பிரதேசத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த அனகட்டி யில் இருந்து கேரளாவில் இருக்கும் இடுக்கி வரை உள்ள பகுதியில் தங்கம் இருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சர்வேயில் தெரிய வந்ததாக சொல்லப் படுகிறது. இந்த தகவல் வெளியே கசிந்ததால் தான் அந்த குறிப்பிட்ட பகுதியில் உளள நிலங்களை, வசதி படைத்தவர்கள் வாங்கி குவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த ஒருவர் சொன்னபோது, இந்திய புவியியல் துறையினர் சமீபத்தில் இப்பகுதியில் எடுத்த சர்வேயில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க படிமங்கள் அப்பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இதனை ஏன் வெட்டி எடுக்க அரசு முன்வரவில்லை என்றால் தற்போது விற்கப்படும் தங்கத்தின் விலையை விட இதனை வெட்டி எடுக்க அதிகம் செலவாகும் என்பதால்தான். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெக்கான் கோல்டு என்ற ஒரு தனியார் நிறுவனமும் இப்பகுதியை சர்வே செய்து, தங்கம் இருப்பதை உறுதி செய்து மேலே குறிப்பிட்ட காரணத்தால் வெட்டி எடுக்க முன் வரவில்லை. ஆனால் அங்குள்ள மக்களோ இந்த விபரம் எல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களாகவே அங்குள்ள பாறைகளை வெட்டி எடுத்து அதில் தங்கம் இருக்கிறதா என்று சோதித்து வருகிறார்கள். தங்கம் இருப்பதாக சொல்லப்பட்ட அனகட்டி மற்றும் இடுக்கி ஏரியா, முற்றிலும் காட்டுப்பகுதியாகும். இங்குள்ள நிலம் யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை. அங்கு பழங்குடியினர்தான் வசித்து வருகிறார்கள். ஆனால் இப்போதோ அங்குள்ள நிலம் விதிமுறைகளை மீறி தனியாருக்கு சொந்தமாகிக்கொண்டிருக்கிறது. பழங்குடியினர் குடியிருக்கும் நிலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். ஆனால் அது இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. அவைகள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மாஃபியா கும்பலிடமும் அரசியல்வாதிகளின் பினாமிகளிடமும் செல்கினறன. அங்கு தங்கம் இருப்பது குறித்து அரசு தெளிவான விளக்கம் வெளியிட்டு, அங்குள்ள காட்டுப்பகுதி சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். |
No comments:
Post a Comment