Friday, September 7, 2007

ஐ.டி., பெஸ்ட் 07' கம்ப்யூட்டர் கண்காட்சி



சென்னை:'அர்சன்ஸ்' சார்பில் ஏழு இடங்களில் 'ஐ.டி., பெஸ்ட் 07' கம்ப்யூட்டர் கண்காட்சி நடக்கிறது.'அர்சன்ஸ்' குழுமம் சார்பில் 'ஐ.டி., பெஸ்ட் 07' கம்ப்யூட்டர் கண்காட்சி நடக்கிறது. கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையில் ஹெச்.சி.எல்., தோஷிபா, கேனான், இன்டெல், மைக்ரோ சாப்ட் கம்பெனிகளின் தயாரிப்புகளான கம்ப்யூட்டர், லேப்டாப், பிரின்டர், புரஜெக்டர் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி தி.நகர் வாணி மஹால், வளசரவாக்கம் மூர்த்தி மஹால், வில்லிவாக்கம் டி.கே.ஏ., திருமண மண்டபம், தாம்பரம், அம்பத்தூர், போரூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நேற்று முதல் நாளை (9ம் தேதி) வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.இக்கண்காட்சியில் அதிகபட்சமாக நான்காயிரம் ரூபாய் தள்ளுபடியும், உதிரி பாகங்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எளிய தவணை முறையில் கடன் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த மூன்று நாள் கண்காட்சியை அர்சன்ஸ் குழுமம் செய்து வருகிறது.

No comments: