Wednesday, October 3, 2007

Saturday, September 29, 2007

பைலட் ஆக விருப்பமா ? அப்படியானால் வெளிநாடு செல்லுங்கள். அங்குதான் பயிற்சி கட்டணம் குறைவு

புதுடில்லி : பைலட் ஆகி உலகம் முழுவதும் விமானத்தில் சுற்ற யாருக்கு தான் ஆசை இருக்காது. அதுவும் இப்போது பைலட்டுக்கு இருக்கும் டிமாண்ட்டில் எல்லோருமே பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பது நியாயமானதே. ஆனால் இந்தியாவில் பைலட்டுக்கான படிப்புக்கு ஆகும் செலவை விட, அமெரிக்காவில் படித்தால் குறைவாகத்தான் செலவாகிறது. இந்தியாவில் படிப்பதை விட அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் பைலட் படிப்பிற்கு குறைவான கட்டணம் தான் ஆகிறது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்திராகாந்தி ராஷ்டிரிய உர்ரான் அகாடமியில், பைலட்டுக்கான படிப்பிற்கு ரூ.19 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே படிப்பிற்கு அமெரிக்காவில் ரூ.16 லட்சம் தான் கட்டணம். மேலும் அமெரிக்காவில் ஆறு மாதத்தில் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுவிடும். ஆனால் இந்தியாவிலோ பயிற்சி காலம் இரண்டரை ஆண்டுகள். மேலும் பைலட்டாக பயிற்சி எடுத்த ஒருவர் 200 மணி நேரம் விமானத்தை ஓட்டி இருந்தால் மட்டுமே லைசன்ஸ் கொடுக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளிலும் கட்டணம் குறைவுதான். மலேஷியாவில் ரூ.10 முதல் ரூ.12 லட்சம்தான் கட்டணம். பயிற்சி காலமும் ஒரு வருடம்தான். பிலிப்பைன்சில் ரூ.9 முதல் ரூ.10 லட்சம் வரை தான் கட்டணம். உலகிலேயே லைலட் படிப்பிற்கு குறைந்த கட்டணம் வசூலிப்பது பிலிப்பைன்சில்தான். இதனால் இந்தியாவில் இருந்து ஏராளமானவர்கள் பைலட் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். கடந்த ஒரு வருட காலத்தில் இந்தியாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்த பைலட்டுகளில் 60 சதவீதத்தினர் வெளிநாடுகளில் பயிற்சி எடுத்தவர்கள் தான். ஆனால் இதே நிலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இப்போது இந்தியாவில் விமான சர்வீஸ் துறை வேகமாக வளர்ந்து வருவதால், இன்னும் ஐந்து வருடங்களுக்கு, வருடத்திற்கு ஆயிரம் பைலட்டுகள் வரை தேவைப்படுகிறார்கள். தற்போது இந்தியாவில் 42 பைலட் டிரெய்னிங் இன்ஸ்டியூட்டுகள் இருக்கின்றன. அவைகளில் 25 தான் இயங்குகின்றன.( மாநிலங்கள் நடத்துவது 14, தனியார் நடத்துவது 11 ) இவைகளின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 பைலட்டுகள் தான் வெளியே வருகிறார்கள். வருடத்திற்கு 600 முதல் 700 பைலட்டுகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது. தனியார் நடத்தும் பயிற்சி நிலையங்கள் ரூ.16 லட்சம் வசூலிக்கின்றன. இவைகள் பலதரப்பட்ட விமான இஞ்சின்களை இயக்க பயிற்சி கொடுப்பதில்லை. பலதரப்பட்ட இஞ்சின்களை இயக்க தெரிந்திருந்தால்தான் சர்வதேச அளவில் இருக்கும் விமான கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்ல முடியும். அரசு நடத்தும் பயிற்சி பள்ளியில் ரூ.10 லட்சம் கட்டணம் வசூலிக்கிறார்கள். இங்கும் வசதி குறைவு காரணமாக பயிற்சியை முடிக்க மூன்று வருடங்கள் ஆகி விடுகிறது. மேலும் அவர்களுக்கு குறைந்த அளவே வானில் பறந்த அனுபவம் இருக்கிறது. அவர்கள் 10 மாத காலத்தில் மொத்தமே 20 மணி நேர பறக்கும் அனுபவத்தை பெறுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் படித்த ஒருவர் ஐந்து மாதத்தில் 200 மணி நேர பறக்கும் அனுபவத்தை பெறுகிறார். இந்தியாவில் எரிபொருளின் விலை அதிகம்; விமானங்களை பராமரிக்க செலவு அதிகம் மற்றும் விமான பயிற்சி கொடுப்பவருக்கு சம்பளம் அதிகம் போன்றவைதான் இங்கு அதிக கட்டணம் வசூலிக்க காரணமாக அமைகிறது. விமான பயிற்சியாளருக்கு மாத சம்பளம் ரூ.3 லட்சம் கொடுக்கப்படுகிறது. அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர் ஏதாவது ஒரு விமான கம்பெனியில் அதைவிட கூடுதல் சம்பளத்திற்கு விமானியாக சேர்ந்து விடுவார். மேலும் ஏர்பஸ் ஏ 320, போயிங் 737 போன்ற நவீன ரக விமானங்களை ஓட்ட இந்தியாவில் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் பயிற்சி கொடுப்பதில்லை. இந்த வகை விமானங்கø வாங்கி இருக்கும் விமான கம்பெனியே அவர்களிடம் இருக்கும் விமானிகளுக்கு இந்த வகை விமானங்களை ஓட்ட பயிற்சி கொடுத்துக்கொள்கிறது.

Thursday, September 27, 2007

Our Products MENS FS MENS T SHIRT





Our Products MENS FS MENS T SHIRT

Saturday, September 22, 2007

Our Product



this is our product

Thursday, September 13, 2007

படித்தில் பிடித்தது…

படித்தில் பிடித்தது…

மீண்டும் சில சுட்டிகள். சமீபத்தில் படித்ததில் பிடித்தது.

  1. சேவியர் எழுதிய அறிவியல் புனைகதை ஏலி ஏலி லெமா சபக்தானி
  2. அரைபிளேடு எழுதிய கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை
  3. சரவ் எழுதிய திருமணம் 1.0

மாந்தீவு- பெட்டகம்

மாந்தீவு- பெட்டகம்
தீவின் நுழைவுப் பகுதி
தீவின் நுழைவுப் பகுதி

மட்டக்களப்பு கடலேரியில் அமைந்துள்ள மாந்தீவு என்னும் தீவில் தொழுநோயாளர்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்று 1824 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகின்றது.

தற்போது அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதால், அந்த மருத்துவமனையின் நிர்வாகம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளின் விடுதி ஒன்று
நோயாளிகளின் விடுதி ஒன்று
அங்கு தற்போது ஒரு புனருத்தாரண மருத்துவமனையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் போதனா மருத்துவமனையின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் மாந்தீவில் தற்போதைய நிலைமை, அங்கு எஞ்சியுள்ள நோயாளிகளின் மன உணர்வுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பெட்டகம் ஒன்றை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

சென்னை நகரில் 'ஏசி' பஸ்கள் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்த உள்ள அதிநவீன ஏ.சி., பஸ்களில் பயணம் செய்ய மற்ற பஸ்களை விட இரண்டரை மடங்கு கட்டணம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாகும். இந்த 'வால்வோ' பஸ்சை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.சென்னை மாநகர போக்கு

வரத்துக்கழகம் அதிநவீன குளிர்சாதன 'வால்வோ' பஸ்களை நான்கு வழித்தடங்களில் இயக்க உள்ளது. தடம் எண்.21ஜி- தாம்பரத்தில் இருந்து பிராட்வே வரையும், தடம் எண். 19 ஜி- பிராட்வேயில் இருந்து கோவளம் வரையிலும், தடம் எண் 70- தாம்பரத்தில் இருந்து ஆவடி வரையிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து பிராட்வே வரையிலும் என நான்கு வழித்தடங்களில் இந்த பஸ் இயக்கப்படும்.முற்றிலும் குளிர்சாதனம் செய்யப்பட்ட இந்த தாழ்தள பஸ்சின் தளத்தை மூன்று நிலைகளில் உயர்த்தவோ, குறைக்கவோ முடியும். இதனால் பஸ்சில் வயதானவர்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் சிரமமின்றி ஏறி இறங்க முடியும். மேலும், சாலையில் உள்ள மேடு பள்ளங்கள், வேகத் தடைகளால் பஸ்சின் அடித்தளம் சேதமடையாமல் பாதுகாக்க 'ஏர் சஸ்பென்ஷன்' வசதி இந்த பஸ்சில் உள்ளது.இந்த பஸ்சின் நடுப்பகுதி கதவு மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அதன் 'எல்இடி' திரை, டிரைவரின் முன் பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் படிக்கட்டில் ஏறி இறங்கும் பயணிகளையும், பஸ்சின் பின்பகுதியில் வரும் வாகனங்களையும் டிரைவர் கவனித்து பஸ்சை ஓட்ட முடியும்.இதுதவிர, பஸ்சில் இரண்டு தானியங்கி கதவுகள் 'சென்சாருடன்' பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவுகளை மூடும் போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் கதவுகள் உடனே தானாக திறந்துவிடும். பஸ்சின் முன், பின் மற்றும் இடது பக்கவாட்டில் நவீன தொழில்நுட்பத்திலான வழித்தடப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து இரவிலும், பகலிலும் வழித்தட அறிவுப்புகளை, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். இருக்கைகளும் அழகிய வடிவத்தில் நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளன. பயணிகளுக்கு தகவல்களைக் கொடுக்க 'மைக்' மற்றும் 'ஆம்பிளிபையர்' பொருத்தப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் அவ்வப் போது பயணிகளுக்கு தேவையான தகவல்களை இதன் மூலம் கூறுவர். இசை ஒலித்துக் கொண்டிருக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'லேப் டாப்' உபயோகிப்பவர்களுக்கு தனி வசதியும், மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கு சிறப்பு வசதியும் இதில் உள்ளன.இந்த நவீன பஸ் நேற்று தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த பஸ்சை பார்வையிட்டார். பஸ் குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியன் கூறும் போது, ''ஒரு பஸ் 78 லட்சம் ரூபாய் செலவாகிறது. கர்நாடகா, புனே, டில்லி ஆகிய நகரங்களில் இந்த வகை பஸ்கள் ஓடுகின்றன. சுவீடன் தயாரிப்பான இந்த பஸ்சின் உடற்கட்டு பெங்களூருவில் செய்யப்பட்டது. 300 குதிரைசக்தி திறன் கொண்ட இந்த பஸ் முதலில் நான்கு வழித்தடங்களில் இயக்கப்படும். இதற்கு வரவேற்பு இருந்தால் அனைத்து வழித்தடங்களிலும் இது போன்ற பஸ்கள் இயக்கப்படும். இதில் பயணம் செய்ய சாதாரண பஸ்களை விட இரண்டரை மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் இருக்கும். இதில் பணம் கொடுத்து மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். சீசன் டிக்கெட், இலவச பாஸ் போன்றவை இதற்கு பொருந்தாது ,'' என்றார்.போலீசார், போக்குவரத்து ஊழியர்கள் இதில் 'ஓசி' பயணம் செய்ய முடியாது.

அப்பல்லோ ஹாஸ்பிடல், டெக்கான் ஏவியேஷன் இணைந்து ஹெலி - ஆம்புலன்ஸ் சர்வீஸ்

பெங்களூரு : பெங்களூருவில் இருக்கும் அப்பல்லோ ஹாஸ்பிடல் என்டர்பிரைசஸ் மற்றும் டெக்கான் ஏவியேஷன் இணைந்து ஹெலி - ஆம்புலன்ஸ் சர்வீஸ் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஒத்திகை விழா நேற்று பெங்களூருவில் நடந்தது. இவர்கள் மட்டும் சேர்ந்து ஹெலிகாப்டர் சேவை நடத்தினால் நோயாளிகளுக்கு செலவு அதிகமாகும் என்பதால் இவர்களுடன் சேர்ந்து கொள்ள மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளை நாடியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போதெல்லாம் நிறைய அவசர கேஸ்களுக்கு விமான சேவை தேவைப்படுகிறது. அப்போது தான் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் சேவை மிகுந்த செலவை ஏற்படுத்தும். இம்மாதிரியான சமயங்களில் அவர்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் செலவு குறையும் என்று அப்பல்லோ ஹாஸ்பிடல் என்டர் பிரைசஸின் எக்ஸிகூடிவ் டைரக்டர் சங்கீதா ரெட்டி மற்றும் ஏர் டெக்கான் எக்ஸிகூடிவ் சேர்மன் கேப்டன் கோபிநாத் ஆகியோர் தெரிவித்தனர். எனவே நாங்கள் மூன்று நான்கு மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் இது சம்பந்தமாக இன்சூரன்ஸ் சட்டதிட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதெல்லாம் முடிந்தபின் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள் என்றனர். ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளில் அப்பல்லோ ஆஸ்பத்திரி, ஹெலிகாப்டர் மூலமாக அவசர நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்துள்ளது. ஆனால் இதற்காக அந்த நோயாளிகளுக்கு ஒரு தடவைக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை செலவாகி உள்ளது. அல்லது ஒரு மணி நேர ஹெலிகாப்டர் சேவைக்கு ரூ.75 ஆயிரம் செலவாகிறது. முறையாக பாலிசி எடுத்தால் இந்த செலவை குறைக்கலாம். முதலில் மெடி அசிஸ்ட் இந்தியா நிறுவனம், இதற்கான செலவில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது. கார்பரேட் அலுவலகங்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க திட்டம் உள்ளது. இப்போது ஹெலிகாப்டர் இறங்க வசதி உள்ள பெங்களூரு, டில்லி, புவனேஷ்வர் மற்றும் கோல்கட்டாவில் இந்த வசதி கொண்டு வரப்படுகிறது. ஹெலி - ஆம்புலன்ஸ் வசதி தேவைப்படுபவர்கள் போன் செய்த அரை மணி நேரத்தில் ஹெலிகாப்டர் அங்கு வந்து விடும். ஹெலிகாப்டரிலேயே உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருத்துவ குழு இருக்கும்.

Tuesday, September 11, 2007

தமிழ்நாடு கேரள மலைப்பிரதேசத்தில் தங்கம் இருக்கிறதா ?

சென்னை : தமிழ்நாடு,கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் பணம் படைத்தவர்கள் இப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஏராளமான நிலங்களை வாங்கி குவிக்க ஆரம்பிக்கின்றனர். காரணம் அந்த பகுதியில் உள்ள பாறைகளில் தங்கம் படிந்திருப்பதாக வந்த தகவலால்தான். தமிழ்நாடு கேரள எல்லையில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பிரதேசத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த அனகட்டி யில் இருந்து கேரளாவில் இருக்கும் இடுக்கி வரை உள்ள பகுதியில் தங்கம் இருப்பதாக சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சர்வேயில் தெரிய வந்ததாக சொல்லப் படுகிறது. இந்த தகவல் வெளியே கசிந்ததால் தான் அந்த குறிப்பிட்ட பகுதியில் உளள நிலங்களை, வசதி படைத்தவர்கள் வாங்கி குவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த ஒருவர் சொன்னபோது, இந்திய புவியியல் துறையினர் சமீபத்தில் இப்பகுதியில் எடுத்த சர்வேயில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க படிமங்கள் அப்பகுதியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இதனை ஏன் வெட்டி எடுக்க அரசு முன்வரவில்லை என்றால் தற்போது விற்கப்படும் தங்கத்தின் விலையை விட இதனை வெட்டி எடுக்க அதிகம் செலவாகும் என்பதால்தான். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெக்கான் கோல்டு என்ற ஒரு தனியார் நிறுவனமும் இப்பகுதியை சர்வே செய்து, தங்கம் இருப்பதை உறுதி செய்து மேலே குறிப்பிட்ட காரணத்தால் வெட்டி எடுக்க முன் வரவில்லை. ஆனால் அங்குள்ள மக்களோ இந்த விபரம் எல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களாகவே அங்குள்ள பாறைகளை வெட்டி எடுத்து அதில் தங்கம் இருக்கிறதா என்று சோதித்து வருகிறார்கள். தங்கம் இருப்பதாக சொல்லப்பட்ட அனகட்டி மற்றும் இடுக்கி ஏரியா, முற்றிலும் காட்டுப்பகுதியாகும். இங்குள்ள நிலம் யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை. அங்கு பழங்குடியினர்தான் வசித்து வருகிறார்கள். ஆனால் இப்போதோ அங்குள்ள நிலம் விதிமுறைகளை மீறி தனியாருக்கு சொந்தமாகிக்கொண்டிருக்கிறது. பழங்குடியினர் குடியிருக்கும் நிலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். ஆனால் அது இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. அவைகள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மாஃபியா கும்பலிடமும் அரசியல்வாதிகளின் பினாமிகளிடமும் செல்கினறன. அங்கு தங்கம் இருப்பது குறித்து அரசு தெளிவான விளக்கம் வெளியிட்டு, அங்குள்ள காட்டுப்பகுதி சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.

Monday, September 10, 2007

கீழக்கரை - தமிழ் விக்கிபீடியா

கீழக்கரை

கீழக்கரை

கீழக்கரை
மாநிலம்
மாவட்டங்கள்
தமிழ்நாடு
இராமநாதபுரம்
அமைவிடம்
பரப்பளவு
- கடல் மட்டத்திலிருந்து உயரம்
ச.கி.மீ

- 8 மீட்டர்
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை (2001)
- மக்களடர்த்தி
30,472
- /ச.கி.மீ
குறியீடுகள்
- அஞ்சல்
- தொலைபேசி
- வாகனம்

- 623 517
- +91 4567
- TN 65

கீழக்கரை (ஆங்கிலம்:Kilakarai(Keelakarai)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை. இணைப்பு ஜனவரி 30, 2007 அன்று அணுகப்பட்டது.

About India

05:15 PM in New Dehli



GDP growth was important in 2005 but the economic activity may slow down in 2006. GDP growth was 6.9% in 2004, 7.1% in 2005. The IMF forecasts a 6.3% growth in 2006. Most of the other economic indicators are favourable. Public funds are the economy's main difficulty: public debt accounts for 90% of the GDP and its dynamic is unsustainable in the mid-term. Furthermore, despite good economic results, India remains a poor country where one fourth of the population live below the poverty threshold, that's why the government launched an investment program to improve infrastructures.

India is the world's fourth agricultural power. Agriculture provides about 22% of the GDP and employs almost two thirds of the active population. With the largest livestock in the world, India is one of the world's very leading producers of milk, fruits, vegetables, wheat, rice, tea, cotton and sugar. Ore and raw materials resources are important. Coal is the country's main energy source (India is the fourth largest world producer of coal). In the manufacturing industry, textile plays a predominant role. Chemical industry is the second big industrial sector (12% of the GDP). New technologies sector is also expanding: high-tech services, especially computing development are exported on a large scale.

India's influence in world-wide trade remains low and represents less than 1% of the world's exports. India's main trade partners are the United States, the United Arab Emirates and China. The country mainly exports jewels (83% of diamonds sold in the world are cut in India), fabrics, clothes, leather and carpets. It mainly imports oil, precious stones, chemical products and computer equipment.


Sunday, September 9, 2007